முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை : மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      உலகம்
Indonesia 2023-12-04

Source: provided

ஜகார்த்தா : இந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலையால் மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  3 பேர் மட்டுமே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது. நாலாபுறமும் நெருப்புக் குழம்புகள் சிதறின. விண்ணை முட்டும் அளவுக்கு சாம்பல் படர்ந்தது. இதனால் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள், அவசரம் அவசரமாக திரும்பினர். மொத்தம் 75 மலையேற்ற வீரர்கள் அங்கு சென்றிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் 46 பேர் கீழே இறங்கிவிட்டனர். அவர்களில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டிருப்பதால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மற்றவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் சடலமாக கண்டறியப்பட்டனர். 3 பேர் மட்டுமே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான இந்தோனேசியாவில் சிறியதும் பெரியதுமான சுமார் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து