முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: சென்னையில் பெரும்பாலான பகுதியில் மக்கள் கடும் அவதி

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      தமிழகம்
MDS-1 2023-12-04

Source: provided

சென்னை : சென்னையில், மிக்ஜம் புயல் காரணமாக பெய்த அதிகனமழை காரணமாக, பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை வண்டலூர் அருகே வீடுகளில் மழை நீர் புகுந்தது. தங்கவேல்நகர் உள்ளிட்ட பல பகுதிகள் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. பூந்தமல்லி, நசரத்பேட்டை குடியிருப்புகளையும் குடிநீர் சூழ்ந்து காணப்படுகிறது. யமுனா நகர், அன்பரசன் நகர், நடராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரில் சூழப்பட்டுள்ளன. இங்கு பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அன்னனூர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. மதுரவாயல், ஆவடி ,மாங்காடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்பு படையினர் மீட்டனர். திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. மூலக்கொத்தலம் பகுதியில் தண்ணீரில் வீடுகள் முழ்கியுள்ளன. மடிப்பாக்கம் ராம் நகர், பாலாஜிநகர், சீனிவாச நகர் பகுதிகளில் மழைநீர் வடியாததால் இடுப்பளவு நீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஆர்.கே.நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களை படகுகள் மூலம் போலீசார் மீட்டனர். பம்மல், பொழிச்சலூர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து