முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024 ஐ.பி.எல். தொடரை மார்ச் 22 முதல் தொடங்க பி.சி.சி.ஐ. புதிய திட்டம்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரை மார்ச் 22ம் தேதி முதல் தொடங்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. தொடக்க ஆட்டம் சென்னையில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

10 அணிகள்... 

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ளும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகி இருந்தது. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடர் நடைபெறும் சமயத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் கேள்வி... 

அதனால் ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் தூமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த தகவலின் படி இந்த வருட ஐ.பி.எல் தொடர் மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கும் எனவும் தொடரின் தொடக்க ஆட்டம் சென்னையில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

2 கட்டங்களாக... 

இந்த வருட ஐ.பி.எல் தொடர் 2 கட்டங்களாக நடைபெறும் என கூறப்படுகிறது. தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ முதலில் அறிவிக்கும். அதன் பின்னர் 2024 பொதுத் தேர்தலுக்கான அட்டவணை வெளியானவுடன் மீதமுள்ள ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து