முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் கடன் சுமை சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      தமிழகம்
Thangam 2023 04 05

Source: provided

சென்னை:தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால்தான் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை 2024-2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.  இதனையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.  இந்த விவாதத்திற்கு பதில் அளித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நேற்று பேசினார்.  

அப்போது அவர் கூறியதாவது.,  பட்ஜெட்டில்  மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்துக்கு ரூ.3,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் சமூக நீதி பிரதிபலிக்கிறது. புதிய வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  திருநங்கைகளின் உயர்கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசை விட தமிழ்நாடு அரசே கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணம் தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நிதியையும் வழங்கவில்லை. இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் திகழ்கிறது. மேலும், மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் தமிழ்நாடு அரசு கடன் சுமையில் உள்ளது” இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து