முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் த.மா.கா. கூட்டணி : ஜி.கே.வாசன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      தமிழகம்
GK-Vasan

Source: provided

சென்னை : மக்களவை தேர்தலை பா.ஜ.க.வுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும்” என த.மா.கா தலைவரும் எம்.பி.யுமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திமுக, அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

அதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவில் இன்னும் கூட்டணி எதுவும் உறுதியாகவில்லை. தேர்தல் குறித்த அறிவிப்பு வந்த பிறகே கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் கூட்டணியை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியானது.

மேலும் அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு பிறகு பா.ஜ.க.வும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பா.ஜ.க. கூட்டணியில் உள்ள  புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதே போல பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.  இந்த சந்திப்பு, பா.ஜ.க. உடனான கூட்டணி குறித்த அதிகாரபூர்வ சந்திப்பாக இது இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அவர் தெரிவித்ததாவது., மக்களவை தேர்தலை பா.ஜ.க.வுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும்.  பிரதமர் மோடியை வேட்பாளராக கொண்ட பா.ஜ.க.வில் அங்கம் வகிக்க தமாக முடிவு செய்துள்ளது. 

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுகிறோம். இன்று பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன் தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழர்களை மத்திய பா.ஜ.க. அரசு விரும்புகிறது. விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழிலுக்கு பா.ஜ.க அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.

படித்தவர்கள், இளைஞர்கள் மோடியின் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர். பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.  வாக்களித்த தமிழக மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது.  தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்று அனைத்தும் நிறைவுபெறும். விரைவில் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இணைந்ததும் தொகுதிப்பங்கீடு முழு வடிவம் பெறும். வளமான பாரதம் அமைய விரும்பும் கட்சிகள் அனைத்தும் பா.ஜ.க.கூட்டணியில் இணைய வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்தார்.

மக்களவைத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன், த.மா.கா கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து