முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் : முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
Jayakumar 2023 04 15

Source: provided

சென்னை : 10 நாட்களில் எந்தெந்த கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:-

அ.தி.மு.க. மீதான அச்சத்தால் தி.மு.க. அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. இது ஒரு தோல்வி பயம் தான். எந்தெந்த கட்சிகள் எங்கு செல்லும் என்பது இன்னும் பத்து நாட்களில் தெரியவரும். 

எங்கள் தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையை ஏற்று கூட்டணிக்கு வர பல கட்சிகள் தயாராக உள்ளனர். 10 நாட்களில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளது என்பது குறித்து பொதுச்செயலாளர் அறிவிப்பார். 

கூட்டணிக்காக நாங்கள் யாரிடமும் கெஞ்சவில்லை என கூறியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது காங்கிரஸ் கூட்டணி உடைவதாகத் தான் தெரிகிறது. 

வரிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் என்பது போல மத்திய அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து