முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் வெடிவிபத்து வாடிக்கையாளர்கள் பலர் காயம்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      இந்தியா
Bang 2024-03-01

Source: provided

பெங்களூரு : பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே என்கிற பிரபல உணவகத்தில் சந்தேகத்திற்கு உரிய வகையில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்தனர்.

பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான உணவகத்தில் நேற்று (01.03.2024) வெடி விபத்து ஏற்பட்டது.  இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, எ னினும், இந்த சம்பவத்தில் ஐந்து பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் படுகாயமடைந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  வெடி விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அதிமகாக கூடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் ராமேஸ்வரம் கபே உணவக வளாகத்தில் சில சேதங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து சேதத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து