முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாந்தன் உடல் இலங்கை கொண்டு செல்லப்பட்டது

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
Shantahn 2023-02-28

Source: provided

சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, அண்மையில் விடுதலையான சாந்தன் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவரது உடல் இலங்கைக் கொண்டு செல்லப்பட்டது. விமானம் மூலம், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சாந்தன் உடல் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 32 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் சாந்தன். சிறையிலிருந்து விடுதலையான நிலையில், உடல்நிலை பாதிப்புக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன், பிப் 28ம் தேதி காலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சாந்தனுடைய கடைசி விருப்பம் அவரது தாயைப் பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால், இலங்கை திரும்ப முடியாததால், அது நிறைவேறாமலேயே அவர் மரணமடைந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அவரது உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. இந்திய தூதரகத்தின் மூலம், இலங்கை கொண்டு செல்ல அனுமதி கொடுத்தது. இதனை அடுத்து இலங்கை தூதரகம் தன்னுடைய அனுமதியை தராமல் சுமார் ஒன்றரை மணி நேரம் சரக்கு தளவாளம் வெளிப்பகுதியில் சாந்தன் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்தது. இலங்கை தூதரகம் அனுமதி அளித்த பிறகு சாந்தன் அவர்களின் உடல் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு இலங்கை கொண்டு செல்லப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து