முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோபைடனை போன்ற திறமையில்லாத அதிபரை அமெரிக்கா கண்டதில்லை : முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சனம்

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      உலகம்
Joe-Biden 2023-08-26

Source: provided

வாஷிங்டன் : ஜோபைடனை போன்ற ஒரு திறமையில்லாத அதிபரை அமெரிக்கா இதுவரை கண்டதில்லை என்று முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். 

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் ஜியார்ஜியா. இதன் தலைநகரம், அட்லான்டா ஆகும். பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த லேக்கன் ஹோப் ரைலி எனும் 22 வயது மாணவி காலையில் உடற்பயிற்சி ஓட்டத்திற்கு சென்றவர் திரும்பவில்லை. 

இதையடுத்து அவருடன் தங்கி இருந்த மாணவிகள், புகார் செய்ததையடுத்து, காவல்துறை அவரை தேடி வந்தது. அவர்கள் தேடலில் மரங்களடர்ந்த பகுதியில் ரைலியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து ஜோஸ் அன்டோனியோ இபார்ரா  என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்து விசாரித்தனர். 

தீவிர விசாரணையில் ஜோஸ், லேக்கனை தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.ஜோஸ் தாக்கும் போது, சமாளித்த லேக்கன், உடனடியாக 911 எனும் அவசர உதவிக்கான எண்ணை லேக்கன் அழைக்க முயன்றதாகவும், அதில் பதட்டமடைந்த ஜோஸ் அவரை கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லேக்கனின் பிரேத பரிசோதனையில் உயிரிழப்பதற்கு முன்பாக அவர் ஜோசுடன் தீவிரமாக போராடிய அறிகுறிகள் தெரிந்தன.வெனிசுலா நாட்டை சேர்ந்த ஜோஸ், 2022-ல் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய அதிபர் ஜோபைடனும், முன்னாள் அதிபர் டிரம்பும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். 

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஜோபைடன் ரைலி மரணம் குறித்து ஏதும் பேசவில்லை. ஜோபைடனை குற்றம்சாட்டி டெக்சாஸ் மாநில பிரச்சார உரையில் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது,

நிலைகுலைந்து போயிருக்கும் ரைலியின் பெற்றோர்களுடன் தொலைபேசியில் பேசினேன். சட்டவிரோதமாக குடியேறுபவர்களை ஜோபைடன் தடுக்க தவறியதால்தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன. ஜோபைடனை போன்ற ஒரு திறமையில்லாத அதிபரை அமெரிக்கா இதுவரை கண்டதில்லை. 

தனது பிரச்சாரத்தின் போது ஜோபைடன், ரைலியின் பெயரை கூட உச்சரிக்கவில்லை. ஆனால், நான் ரைலியை மறக்க மாட்டேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து