முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசா மக்களுக்கு ராணுவம் மூலம் வான்வழியாக நிவாரண பொருட்கள் : அதிபர் ஜோபைடன் அறிவிப்பு

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      உலகம்
Joe-Biden 2023 03 28

Source: provided

வாஷிங்டன் : காசாவில் அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 

பட்டினியால் உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான உதவிப் பொருட்கள் அங்குள்ள மக்களுக்க சென்றடையும் நிலை உள்ளது.

இந்த நிலையில்தான் காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் ராணுவம் சம்மதம் தெரிவித்தது. லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்றது. அப்போது லாரிகளை முற்றுகையிட்டு உணவுப் பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்தனர்.

அப்போது பாதுகாப்பிற்கான நின்றிருந்த இஸ்ரேல் ராணுவத்தை நோக்கி மக்கள் வந்ததாகவும், தங்களுக்கு எதிராக தாக்குதல் மிரட்டல் என நம்பியதாகவும் கூறி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. 

இதனால் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தின.

இந்த நிலையில் காசாவில் அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். மேலும் என்னென்ன வழிகள் இருக்கிறது. அவைகள் அனைத்தும் ஆராயப்படும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். 

மேலும் ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபடப்போவதாக அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து