முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் 6 தொகுதிகளுக்கு பா.ஜ.க.வின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      இந்தியா
BJP 2023 04 10

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிடுகிறது. 

தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. இதுவரை கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி மேலிடம் தேர்வு செய்து வருகிறது.

பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது.தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களின் தலைமை தயாரித்த வேட்பாளர் பட்டியல்கள் அந்தந்த மாநிலங்களின் கோர் கமிட்டி உறுப்பினர்கள் தனித்தனியாக சந்தித்து விரிவாக விவாதித்தன. 

தெலுங்கானா பா.ஜ.க.வில் பாராளுமன்ற வேட்பாளர்கள் 6 பேரின் முதல் பட்டியல் தயாராகி உள்ளது. முதல் பட்டியலை பா.ஜ.க. இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து