முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.வி.எம். முறைகேடு அச்சம் நீக்கப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      இந்தியா
Rajeev-Kumar 2023-08-27

Source: provided

லக்னோ : இ.வி.எம். முறைகேடு குறித்த  அச்சம் நீக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். 

உபி மாநிலம் லக்னோவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மின்னணு எந்திர முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறுகையில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அதன் முகவர்களுக்கு எந்த குறிப்பிட்ட வாக்குச் சாவடி மையத்திற்கு எந்த இ.வி.எம் சென்றுள்ளது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

எந்த இ.வி.எம். பயிற்சிக்கு சென்றுள்ளது என்பது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். அவர்களின் அனுமதியின்றி எந்த ஒரு இ.வி.எம் வைக்கப்பட்டுள்ள அரங்கையும் திறக்க முடியாது. அரசியல் கட்சிகள் இல்லாமல் எந்த நடைமுறையும் இல்லை. 

வாக்குப்பதிவுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட இ.வி.எம்.மில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறித்த தகவல் வாக்குச் சாவடி முகவரிடம் கிடைத்து, வாக்கு எண்ணும் செயல்முறைக்கு முன்பாக அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்க முடியும். இதனால் இ.வி.எம். முறைகேடு குறித்த அச்சம் நீக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து