முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்குலி பயோபிக்கில் ரஜினி

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      விளையாட்டு
Rajini 2024-01-21

Source: provided

முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்தை, பிரபல இந்தி தயாரிப்பாளரும் இயக்குநருமான சஜித் நாடியத்வாலா அண்மையில் சென்னையில் சந்தித்தார். அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இருவரும் புதிய படத்தில் இணையப் போவதாகவும் அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், சஜித் நாடியத்வாலா தயாரிப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தொடர்பாக பேசுவதற்காகவே சஜித் சென்னையில் ரஜினியை சந்தித்தாகவும் கூறப்படுகிறது. இதில் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

_______________________________________________

டெவன் கான்வே விலகல் 

ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் நியூஸிலாந்து அதிரடி வீரர் டெவன் கான்வே காயம் காரணமாக சீசனின் முதல் பாதி ஆட்டங்களை தவற விடலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. டெவன் கான்வே சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போது இடது கட்டை விரலில் காயமடைந்தார். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது 8 வாரங்களாவது அவருக்கு ஓய்வு தேவை என்று நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நியூஸிலாந்து வாரியம் தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த தகவல்: “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 சர்வதேச தொடரின் போது தொடக்க ஆட்டக்காரர் டெவன் கான்வேயின் இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. பல ஸ்கேன்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து, குறைந்தபட்சம் எட்டு வாரங்கள் மீட்புக் காலம் தேவைப்படும்” என்று பதிவிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22ம் தேதி தொடங்குகின்றன. 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறவிருப்பதால் அதன் தேதிகளைப் பொறுத்து மீதிப்போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

_______________________________________________

சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் 

துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.20.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கமின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் 2024 தொடருக்கு கேப்டனாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னால் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பாட் கமின்ஸ் முதல் முறையாக ஐபிஎல் அணி ஒன்றிற்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியுடன் பாட் கமின்ஸ் கேப்டனாகப் பணியாற்றவிருக்கிறார். டேனியல் வெட்டோரி ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு உதவிப் பயிற்சியாளராக இருந்திருப்பதால் வெட்டோரி-கமின்ஸ் ஜோடி ஐபிஎல் 2024 தொடரில் பெரிய அளவில் சோபிக்கும் என்று சன்ரைசர்ஸ் நிர்வாகம் நம்புகிறது.

கமின்ஸ் கேப்டன்சி நியமனத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன் சமூக ஊடகப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. துபாயில் நடந்த ஏலத்தில் கமின்ஸ் அதிகபட்சத் தொகையான ரூ.20.5 கோடிக்கு ஏலம் எடுக்கபப்ட்டார். மேலும் ஹைதராபாத் அணிக்கு இவரது சகா டேவிட் வார்னர் 2015 முதல் 2021 வரை 67 போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார். இப்போது சன்ரைசர்ஸ் அணியை வழிநடத்தும் இரண்டாவது ஆஸ்திரேலியர் ஆனார் கமின்ஸ். கமின்ஸ் இது வரை ஐபிஎல் தொடர்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் ஆடியுள்ளார். பாட் கமின்ஸ் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2023 50 ஓவர் உலகக் கோப்பை போட்டித் தொடரிலும் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளார்.

_______________________________________________

மாற்றுத்திறனாளியின் ஆசை நிறைவேற்றம்

சஞ்சு சாம்சன் கேரளாவில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அவருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த டிசம்பரில், சஞ்சு சாம்சன் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 108 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.

பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் கிரேடு C-ன் ஒரு பகுதியாக இருக்கும் 11 வீரர்களில் சாம்சனும் ஒருவராக உள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ₹ 1 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இன்னமும் இந்திய அணியில் உரிய இடம் கிடைக்க சஞ்சு சாம்சன் போராடி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________

விதர்பா 261 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பையில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விதர்பா 261 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ரஞ்சி கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய விதர்பா 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கரூண் நாயர் 63 ரன்கள் எடுத்தார். மத்திய பிரதேசம் தரப்பில் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

மத்திய பிரதேசம் முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹிமான்ஷு மந்த்ரி 126 ரன்கள் எடுத்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். விதர்பா தரப்பில் உமேஷ் மற்றும் யஷ் தாக்குர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் விதர்பா மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 343 ரன்கள் குவித்துள்ளது. யஷ் ரத்தோட் 97 ரன்களுடனும், ஆதித்யா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

_______________________________________________

டெல்லி அணிக்கு 3-வது வெற்றி

மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி.வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.   இந்நிலையில், மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மோதின. 

இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் அரைசதம் அடித்தார். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து