முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தொடரும்: உத்தரகாண்ட்டில் பிரதமர் மோடி உறுதி

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      இந்தியா
Modi-1 2023 04 03

ராஞ்சி, ஊழல் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாககருதப்படும் இந்திய பாராளுமன்ற தேர்தல் 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. வாக்குஎண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்தநிலையில், உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூரில் நடைபெற்ற பா.ஜ.க பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- கடந்த 10 ஆண்டுகளில் உத்தரகாண்டில் அதிக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். அவர்களால் என்னை தடுக்க முடியாது.

ஊழல் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன். மோடியின் உத்தரவாதம் என்பது உத்தரவாதத்தை நிறைவேற்றுவதாகும் என்றார். மேலும் எண்ணங்கள் சரியாக இருக்கும் போது வளர்ச்சி தானாக உருவாகும். நல்ல எண்ணங்கள் நல்ல முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து