முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டியா கூட்டணி பெயர் விவகாரம்: பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி ஐகோர்ட் இறுதி கெடு

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

Source: provided

புதுடெல்லி : இன்டியா என்னும் பெயரை எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இறுதி கெடு வழங்கியுள்ளது.

பாராளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ‘இன்டியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. ‘இன்டியா’ என்ற பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிரிஷ் பரத்வாஜ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்தியா என்னும் நமது நாட்டின் பெயரை எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக தங்களது கூட்டணிக்கு வைத்திருப்பதாகவும், இது வாக்காளர்களிடம் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இன்டியா என்னும் பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.இந்த மனு மீது ஏற்கனவே பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதன்மீது இன்னும் பதில் அளிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில்,  “மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. ஆகையால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்” என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், ஒரு வாரத்தில் எதிர்க்கட்சிகள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் எனவும், இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 10-ம் தேதி வழக்கு மீண்டும் பட்டியலிடப்படும் எனவும் கூறி வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து