முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்தணி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Roja-2024-04-11

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆந்திர மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார். 

திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படையாக திகழ்கிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.  

இந்த நிலையில் நேற்று கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் திருத்தணி கோவிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. 

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்கள் சரவண பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டு வழியாக நடந்து சென்றும்  சுவாமியை வழிபட்டனர். 

கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல்  நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக திருத்தணி நகரம், அரக்கோணம் சாலை, மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து