முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2024      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் வெற்றி....

ஐ.பி.எல்., தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் பேட்டிங் செய்தது.  குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

ரூ.12 லட்சம்...

இந்த நிலையில், ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து