முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      தமிழகம்
Teachers 2023 04 04

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. 

இந்த ஆண்டு தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்துக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதி வரையும், 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4-ல் தொடங்கி 25-ம் தேதி வரையும் நடைபெற்றன. பிறகு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிக் கடந்த 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.  இத்தேர்வைச் சுமார் 9.10 லட்சம் மாணவ,  மாணவிகள் எழுதினர்.  விடைத்தாள்கள், மண்டல அளவிலான சேகரிப்பு மையங்களில் பாதுகாக்கப்பட்டன.

நேற்று எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டுதல்களும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் இது குறித்து தெரிவித்துள்ளதாவது: 

“எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி,  தமிழகம் முழுவதும் 88 மையங்களில் நடைபெறுகிறது . விடைத்தாள்கள் அடுத்த 8 வேலை நாட்களில் நிறைவு செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  விடைத்தாள் திருத்தும் பணியில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.   திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகும். விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும்.  தமிழ் வழிமற்றும் ஆங்கில வழி விடைத்தாள்களை அதற்குரிய ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும்’” என்று தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து