முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல், ஈரானுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் : மத்திய அரசு அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : மறு அறிவிப்பு வரும் இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசு மீது ஈரான் குற்றம் சுமத்தியது. இதனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது விரைவில் ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்கள் இருப்பிடத்தை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அங்குள்ள இந்தியர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பாக மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், முடிந்தவரை வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து