எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல்லடம், மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடியால் மட்டுமே முடியும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அய்யம்பாளையம் பகுதியில் 1972-ம் ஆண்டு மின்சார கட்டண உயர்வு போராட்டத்தால் உயிர் நீத்த விவசாயிகள் நினைவிடத்தில் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அய்யம்பாளையத்தில் மிக முக்கியமான ஒரு சின்னம் உள்ளது. அதை அனைவரும் மறந்து விட்டனர். அதை நினைவு படுத்துவது நமது கடமை. இங்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கான காரணம் நமது உரிமையை நாமே ஜனநாயகத்தில் பெற்றெடுக்க வேண்டும்.
தியாகி சுப்பையன் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மருமகள் கவிதா ஆகியோர் எங்களுடன் இருக்கின்றனர். தியாகிகளின் நினைவிடத்தில் இருந்து இன்றைய பிரசாரத்தை தொடங்குகிறோம்.
கடந்த ஆண்டு பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் தங்களது தோட்டத்தில் அமர்ந்து மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவை பா.ஜ.க. ஏற்றுக் கொண்டது.
நேற்று முன்தினம் நீதிமன்றம் 5 குற்றவாளிகளுக்கும் தீர்ப்பு வழங்கியுள்ளது. 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு நபருக்கு 6 ஆண்டு ஆயுள் தண்டனையும் வழங்கி உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு ஒரு விதத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
அந்த குடும்பத்தினரின் குழந்தைகள் பா.ஜ.க.வின் பாதுகாப்பில் உள்ளனர். காவல்துறையினர் மிக வேகமாக செயல்பட்டு இந்த வழக்கை முடித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஒரு விதத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும்.
ரஷ்யா -உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கு முன்பு சிரியாவில் நடந்த தாக்குதலில் ஈரான் அதிகாரிகள் இறந்தார்கள். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேரடி போர் சூழல் தொடங்கியுள்ளது. இந்த போர் நேரத்தில் தான் இந்தியாவின் தலைமை இன்னும் வலிமையாக இருக்க வேண்டும்.
நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024-ல் பிரதமர் மோடியின் தலைமை மிக அவசியமாக உள்ளது. காரணம் கடினமான ஒரு சூழ்நிலைக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் போர்சூழல் நிலவினாலும் மோடி பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது.
இப்படிப்பட்ட கடினமான சூழலிலும் 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேறிய நாடாக மோடி உயர்த்தியுள்ளார். மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும். அனைத்து உலக தலைவர்களிடமும் பேச முடியும் என்றால் அது மோடியால் மட்டுமே முடியும்.
2029-ல் மோடி உலகத்தினுடைய தலைவராக உருவெடுப்பார். உலகத்தின் முன்னணி நாடாக இந்தியா இருக்கும். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர நாங்கள் எப்போதோ அறிவித்து விட்டோம். ஆனால் மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாநில அரசுக்கு வரும் வருமானம் காணாமல் போகும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த2 ஆண்டுகளில் 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளோம். கியாஸ் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் அளித்துள்ளோம்.
இந்தியாவைப் பொறுத்தவரை வாக்குச்சீட்டில் இருந்து வாக்குப்பதிவு எந்திரத்திற்கு நாம் மாறிவிட்டோம். 2024-ம் ஆண்டு தோல்விக்கு பிறகும் இண்டியா கூட்டணி இது போன்ற காரணங்களை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஓட்டுச்சீட்டு முறை இருந்தபோது கிராம பகுதிகளில் என்னெல்லாம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கள்ள ஓட்டு தடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா தொழில்நுட்பத்தில் வேற லெவலில் உள்ளது. தேர்தல் நடத்தும் முறையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக உள்ளது. எனவே அமெரிக்காவைப் பார்த்து இந்தியா காப்பி அடிக்க வேண்டாம். இந்தியாவைப் பார்த்துதான் அமெரிக்கா காப்பியடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
15 Mar 2025சென்னை : தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுதத் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-03-2025.
15 Mar 2025 -
“அவரிடமே கேளுங்கள்” செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்
15 Mar 2025சென்னை, என்னை சந்திப்பதை ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடமே சென்று கேளுங்கள் என்று செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி
-
விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.20,500 கோடி இலக்கு: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு
15 Mar 2025சென்னை, உழவர் பெருமக்கள் மகிழும் வகையில் சுமார் ரூ.45,661 கோடி அளவுக்கு வேளாண்மை பட்ஜெட் அமைந்துள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த
-
1.45 மணி நேரம் பட்ஜெட்டை வாசித்ததுதான் சாதனை; விவசாயிகளுக்கு நன்மை இல்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
15 Mar 2025சென்னை, கிட்டத்தட்ட 1.45 மணி நேரம் விவசாய பட்ஜெட்டை வாசித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.
-
வேளாண் பட்ஜெட்டில் பல முத்தான திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
15 Mar 2025சென்னை : வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக வேளாண் பட்ஜெட்-2025 தாக்கல் செய்யப்பட
-
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்
15 Mar 2025புதுடில்லி : பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை அமைச்சர் தெரிவித்தார்.
-
30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5,242 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
15 Mar 2025சென்னை, கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் உழவர்களுக்கு 5,242 கோடி ரூபாய் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது,” என்று வேளாண்மை மற்றும் உழவர்
-
விரைவில் பூமி திரும்புகிறார்: சுனிதா வில்லியம்சை அழைத்து வர டிராகன் விண்கலம் சென்றது
15 Mar 2025புளோரிடா, சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாத காலமாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் வில்மோர் ஆகிய
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹோலி ஊர்வலத்தில் மோதல்; கடைகளுக்கு தீ வைப்பு-பதற்றம்
15 Mar 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் நடந்த ஹோலி கொண்டாட்ட ஊர்வலத்தில் இரண்டு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்ப
-
இந்தியாவில் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம்: ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தல்
15 Mar 2025புதுடெல்லி, உள்நாட்டில் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் எழும்போது தகவல் தொடர்பு சேவைகளை இடைநிறுத்தம் செய்வதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு மையங்களை இந்தியாவில் அமைக்க
-
நத்தம் புளி உள்பட ஐந்து விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
15 Mar 2025சென்னை : வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி அறிமுகம்
15 Mar 2025கலிபோர்னியா : வாட்ஸ்ஆப்பில் தனிப்பட்ட சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டும் கிரியேட் ஈவென்ட் வசதி அறிமுகமாகியுள்ளது.
-
திடீர் மின் தடையால் கியூபா இருளில் மூழ்கியது
15 Mar 2025ஹவானா, கியூபாவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின.
-
போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை
15 Mar 2025மாஸ்கோ, உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
அசாம் மாநிலத்தில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
15 Mar 2025டெல்லி : அசாம் மாநிலத்தில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை எனறு அமித்ஷா பேசினார்.
-
ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: வரும் 18-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
15 Mar 2025புதுடெல்லி : ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை இணைப்பது தொடர்பாக உள்துறை செயலாளருடன் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்
-
நெல்லை த.வெ.க. மாவட்ட செயலாளர் மாரடைப்பால் மரணம்: விஜய் இரங்கல்
15 Mar 2025சென்னை, திருநெல்வேலி த.வெ.க. மாவட்ட செயலாளர் மரடைப்பால் மரணம் அடைந்தார் அவரது குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பாக். உள்ளிட்ட 41 நாடுகளுக்கு பயணத்தடைகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை
15 Mar 2025வாஷிங்கடன், பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 41 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு கடுமையான புதிய பயணத் தடைகள் விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக
-
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலம்
15 Mar 2025கச்சத்தீவு : கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
மாசாணியம்மன் கோவில் நிதியில் இருந்து ரிசார்ட் கட்டுவதற்கான அரசானை வாபஸ்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
15 Mar 2025சென்னை, மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து ரூ.1.4 கோடி செலவில் ஊட்டியில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து
-
20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்
15 Mar 2025சென்னை : தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் முக்கிய ஐ.எஸ். தலைவர் படுகொலை: ஈராக் பிரதமர் தகவல்
15 Mar 2025பாக்தாத், ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் ஸ்டேட் தலைவர் அபு கதீஜா எனும் அப்துல்லா மக்கி மொஸ்லே அல்-ரிபாய் கொல்லப்பட்டதாக ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி தெரிவித
-
தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ஜாமீன் மனு தள்ளுபடி
15 Mar 2025கா்நாடகா : தங்கக் கடத்தல் வழக்கில் கைதான கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகையும் கா்நாடக காவல் துறை டி.ஜி.பி.
-
அமெரிக்காவில் விபத்து: 5 பேர் பலி
15 Mar 2025அமெரிக்கா, அமெரிக்காவில், ஹவார்ட் மற்றும் பார்மெர் இடையிலான சாலையில் டிரக் உட்பட 17 வாகனங்கள் கடந்த வியாழக்கிழமை இரவு ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.