முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி அணி? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது

திங்கட்கிழமை, 13 மே 2024      விளையாட்டு
Delhi-Capitals 2024-03-23

Source: provided

புதுடெல்லி : 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்குமா? என்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது. 

'பிளே-ஆப்' சுற்றுக்கு... 

17- வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22- ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர் , வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். 

8 லீக் போட்டிகள்... 

இதுவரை 62 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 8 லீக் போட்டிகள் எஞ்சியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 18 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டம் எஞ்சியுள்ளன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. இதில் மும்பைக்கு ஒரு ஆட்டமும் பஞ்சாப்புக்கு 2 போட்டியும் உள்ளன.

63-வது லீக் ஆட்டம்....

எஞ்சிய 3 இடங்களுக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (16 புள்ளிகள்), சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் (தலா 14 புள்ளி கள்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (தலா 12 புள்ளி), குஜராத் டைட்டன்ஸ் (10 புள்ளி) ஆகிய 7 அணிகள் உள்ளன. அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த 63-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் -கொல்கத்தா அணிகள் மோதின.

டெல்லிக்கு கடைசி...

இதற்கிடையே,  டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி-லக்னோ அணிகள் மோதுகின்றன. 12 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி அணிக்கு இது கடைசி ஆட்டமாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இயலும். மேலும் அந்த அணியின் ரன் ரேட் மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். லக்னோ அணியும் 12 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் அந்த அணிக்கு 2 போட்டி கள் இருக்கிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க லக்னோவும் வெற்றி கட்டாயத்தில் உள்ளது.

கடும் போட்டி... 

ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றில் நுழையவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 4-வது அணி எது என்பதில் சென்னை, பெங்களூரு, லக்னோ அல்லது டெல்லி ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் சென்னை, பெங்களூரு ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளன. டெல்லியும், லக்னோவும் ரன் ரேட்டில் பின் தங்கி இருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து