முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் நகைச்சுவை கலைஞர் வேட்புமனு தாக்கல்

புதன்கிழமை, 15 மே 2024      இந்தியா
Modi 2024-05-15

Source: provided

வாரணாசி : மோடியை எதிர்த்து உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரான பிரபல மிமிக்கிரி நகைச்சுவை கலைஞர் சியாம் ரங்கீலா(28) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (மே 14) ஊர்வலமாக சென்று தனது வேட்புமனுவை உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த 28 வயதே ஆகும் பிரபல மிமிக்கிரி நகைச்சுவை கலைஞர் சியாம் ரங்கீலா போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

இவர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து புகழ் பெற்றவர் ஆவார். ஆரம்ப காலகட்டத்தில் 2014 தேர்தல் நடைபெற்ற சமயத்தில் பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வந்த சியாம் ரங்கீலா அதன்பின்னர் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் கருத்துகளை தனது நிகழ்ச்சிகளிலும் பொது வெளியிலும் பேசத் தொடங்கினார்.

சியாம் ரங்கீலா, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் பாஜகவுக்கு எதிரான இவரின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் சியாம் ரங்கீலா நேற்று அங்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து ஷியாம் ரங்கீலா பேசுகையில், எதிர் வேட்பாளர்கள் இல்லாமல் மோடி தேர்தலில் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே வாரணாசியில் அவருக்கு எதிராக போட்டியிடுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து