முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

புதன்கிழமை, 15 மே 2024      தமிழகம்
Dengue-fever 2023 06 20

Source: provided

சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக பொது சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியதாவது, திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆகவே டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி, தஞ்சை மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்தான விவரங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இன்புளூயன்சா, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு கொண்ட உள்நோயாளிகள், பொதுவான அறிகுறிகள் கொண்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். சுகாதார மாவட்டம் வாரியாக தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். மருந்து, மாத்திரைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் ஆகியவை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கிராம, நகர மற்றும் மாநகர வாயிலாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு புழு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வீடு வீடாக சென்று கொசு புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், கொசு புழு உற்பத்தியாகாமல் பராமரிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.பொது சுகாதாரத்துறைக்கு மாவட்ட வாரியாக தினசரி காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தான விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை தினசரி அரசு, தனியார் மருத்துவமனைகளிடமிருந்து பெற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தினசரி செயல்பாடுகள், மருந்துகள் இருப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து