முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      தமிழகம்
Rain 2023-08-17

Source: provided

சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம் நாளை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் நாளை 21-ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகளுக்கு வரும்  23-ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து