முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருக்கு எதிரான தோல்விக்கு காரணம்: கெய்க்வாட் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      விளையாட்டு
Gaikwat 2023-12-22

Source: provided

பெங்களூரு : அந்த 3 வீரர்களும் இல்லாததுதான் இந்த சீசனில் எங்கள் தோல்விக்கு காரணம் என்று சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம்...

முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளெஸ்சிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும் குவித்தனர். பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

எட்டக்கூடியதான்...

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், " இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. ஆனாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து சற்று நின்று வந்ததால் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. இருந்தாலும் 200 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். ஆனால் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை நாங்கள் இழந்ததாலேயே அது பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த தொடரில் 14 போட்டியில் விளையாடி 7 வெற்றிகளை பெற்றதில் மகிழ்ச்சி இருந்தாலும் இந்த தொடரில் எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்தது எங்களுக்கு பெரிய பின்னடைவை தந்தது.

காயம் காரணமாக... 

அந்த வகையில் கான்வே, பதிரனா, தீபக் சஹார் ஆகிய மூன்று வீரர்களை நாங்கள் காயம் காரணமாக இழந்தது எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்ததில் மகிழ்ச்சி. எங்களது அணியின் நிர்வாகிகளும் எங்களை சிறப்பாக கவனித்துக் கொண்டனர். தனிப்பட்ட சாதனைகள் எனக்கு எப்பொழுதுமே முக்கியம் கிடையாது. தனிப்பட்ட முறையில் இந்த தொடரில் 500 - 600 ரன்களை அடிப்பதை விட வெற்றிதான் இறுதியில் முக்கியம். அந்த வகையில் இந்த தோல்வி எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து