முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை:நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கணவன், மனைவியாக இருந்த நடிகர் கார்த்திக் குமாரும், பாடகி சுசித்ராவும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2018-ம் ஆண்டு பிரிந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பாடகி சுசித்ரா அளித்த நேர்காணலில், முன்னாள் கணவரான கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் உபயோகிக்கும் பழக்கம் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

முன்னாள் மனைவியான பாடகி சுசித்ராவின் இந்தப் பேட்டி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாயை மானநஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தன்னைப் பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரரான கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவி்க்கக் கூடாது” என பாடகி சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த மனுவுக்கு சுசித்ரா பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து