முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நீதிபதியான ஆந்திராவில் பிறந்த பெண்

சனிக்கிழமை, 25 மே 2024      உலகம்
America 2024-05-25

Source: provided

 வாஷிங்டன் : ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த ஜெயா படிகா என்ற பெண் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை கலிபோர்னியா கவர்னர் பிறப்பித்து உள்ளார். ஜெயா படிகாவுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கலிபோர்னியாவின் சக்ரமென்டோ கவுன்டி சுப்பரீயர் நீதிமன்ற நீதிபதியாக ஜெயா படிகா நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு அவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் கமிஷனராக பணியாற்றி வருகிறார். 

ஜனநாயக கட்சியில் இருந்த இவர், கலிபோர்னியா மாகாண சுகாதார சேவையின் அட்டர்னி ஜெனரல் ஆகவும், கலிபோர்னியா கவர்னர் அலுவலக அவசர சேவை துறையிலும் பணியாற்றி உள்ளார். 

சான்டா கிளாரா சட்ட பல்கலையில் இளநிலை பட்டம் பெற்ற இவர், போஸ்டன் பல்கலையில் சர்வதேச உறவுகள் குறித்த படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.  அதே போல் சீக்கிய மதத்தை சேர்ந்த ராஜ் சிங் பாதேஷாவை, பிரஸ்னோ கவுன்டி சுப்ரீயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். 

கலிபோர்னியாவில் சீக்கியர் ஒருவர் நீதிபதியான பெருமை இவருக்கு கிடைத்து உள்ளது. இதற்காக அவரை பலர் பாராட்டி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து