எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கு நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில், மாநிலம், தொகுதி வாரியாக எத்தனை பேர் ஓட்டுப் போட்டனர், எத்தனை சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன போன்ற விவரங்களை முதன்முறையாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
குற்றச்சாட்டு...
பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 48 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ ஓட்டு சதவீதத்தை அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நேற்று முன்தினம் ( மே 24) விசாரணைக்கு வந்த போது, சந்தேகத்தின் அடிப்படையிலும், அவநம்பிக்கை ஏற்படுத்தவே மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சந்தேகம் எழுப்பி மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்தால் ஓட்டளிக்க வருவதை குறைக்கும். தேர்தல் நடக்கும் காலத்தில் இதுபோன்ற மனுக்கள் எதையும் நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் வாதிட்டது. இதனையடுத்து, தற்போதைய சூழ்நிலையில் மனுவை விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி சுப்ரீம் கோர்ட் வழக்கை ஒத்தி வைத்து உள்ளது.
தேர்தல் ஆணையம்...
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மீதான சந்தேகத்துக்கு பதில் அளிக்கும் விதமாக, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முதல் 5 கட்ட தேர்தல்களின்போது பதிவான வாக்குகள் தொகுதிவாரியாக வழங்கப்பட்டுள்ளன. அதோடு, வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடும் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்முறை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் ஆணையம் வலுப்பெற்றதாக உணர்கிறது என்றும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சாத்தியமில்லை...
கடுமையான, வெளிப்படையான செயல்முறை காரணமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வதற்கு சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், 543 பாராளுமன்றத் தொகுதிகளில் உள்ள சுமார் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை பதிவு செய்யும் படிவம் 17C, அனைத்து வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமும் இருப்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது. படிவம் 17C இல் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை மாற்ற முடியாது என்றும், ஏனெனில் அவை போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்படுவர்...
தேர்தல் நடத்தை விதிகள் 1961ன் விதி 49 V (2)ன் படி, வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குச்சாவடியில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமுக்குக் கொண்டு செல்லப்படும்போது, வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் உடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது, வேட்பாளர் அல்லது அவரது முகவர்கள் 17C படிவத்தின் நகலை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்து ஒவ்வொரு சுற்றிலும் உள்ள முடிவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. எனவே, வாக்கெடுப்பு நாளில் பகிரப்பட்ட வாக்குகளின் தரவை யாராலும் மாற்ற முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 21 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2025
18 Apr 2025 -
கூட்டணி குறித்த கேள்வி: ஓ.பன்னீர் செல்வம் பதில்
18 Apr 2025கோவை : கூட்டணி குறித்த கேள்விக்கு இன்று லீவு என ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
-
ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பலி; 6 பேர் காயம்
18 Apr 2025ப்ளோரிடா : அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
-
பவன் கல்யாண் மீது ரோஜா தாக்கு
18 Apr 2025திருப்பதி : பவன் கல்யாண் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஜா பாய்ச்சல்.
-
என்.ஐ.ஏ.வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
18 Apr 2025புதுடெல்லி : பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தன
-
நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு: குடும்பத்தினர் வேண்டுகோள்
18 Apr 2025சென்னை : நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம்: பிரதமர் நரேந்திரமோடி பதிவு
18 Apr 2025புதுடெல்லி, புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
சீனாவுக்கு இனியும் வரியை அதிகமாக்க விரும்பவில்லை: அதிபர் ட்ரம்ப் திடீர் முடிவு
18 Apr 2025வாஷிங்டன், சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை
18 Apr 2025அமெரிக்கா : பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சக பயணியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
விரைவில் தமிழ் வழி மருத்துவக் கல்வி: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
18 Apr 2025சென்னை : தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
ஜி.பி.எஸ். முறையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பா..? மத்திய அரசு விளக்கம்
18 Apr 2025புதுடில்லி, மே 1 முதல் ஜி.பி.எஸ். முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுகிறது அமெரிக்கா?
18 Apr 2025பாரிஸ் : ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில், இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால
-
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்: 38 பேர் பலி
18 Apr 2025சனா : இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வரும் நிலையில், ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 38 பேர் பலியானார்கள்.
-
ரூ.9 ஆயிரத்தை நெருங்கிய ஒரு கிராம் தங்கம் விலை..!
18 Apr 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.8945-க்கு விற்பனையானது.
-
சென்னையில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
18 Apr 2025சென்னை, சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
-
கொலம்பியாவில் சுகாதார அவசர நிலை: மஞ்சள் காய்ச்சலுக்கு 34 பேர் பலி
18 Apr 2025பொகாடா : தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொடியேற்றத்துடன் தொடங்கியது ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா
18 Apr 2025திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் : ஹமாஸ் தலைவர் திடீர் அறிவிப்பு
18 Apr 2025கெய்ரோ : பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என்று ஹமாஸ் தலைவர் அறிவித்துள்ளார்.
-
செங்கோட்டையன் தலைமையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
18 Apr 2025கோபி : அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சை கண்டித்து செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
கோவையில் 26, 27-ம் தேதிகளில் விஜய் தலைமையில் பூத் கமிட்டி மாநாடு
18 Apr 2025சென்னை, கோவையில் வருகிற 26, 27-ம் தேதிகளில் விஜய் தலைமையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
-
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கையைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு
18 Apr 2025வேதாரண்யம் : மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பக்தர்கள் யாரும் வராததால் மேல்பாதி அம்மன் கோவில் மூடல்
18 Apr 2025விழுப்புரம் : பக்தர்கள் யாரும் வராததால் மேல்பாதி அம்மன் கோவில் நேற்று மூடப்பட்டது
-
உணவு ஆணையத்தின் உறுப்பினராக அன்னபூர்ணா சீனிவாசன் நியமனம்
18 Apr 2025சென்னை : கோவை ஸ்ரீஅன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சீனிவாசனை தமிழக உணவு ஆணையத்தின் உறுப்பினராக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழ்நாடு கவர்னருக்கு எதிராக சென்னையில் மா.கம்யூ. போராட்டம்
18 Apr 2025சென்னை, தமிழக கவர்னர் ஆர்.என்.
-
குடியரசுத்துணைத் தலைவர் ஜகதீப் தங்கரின் கருத்துக்கு தி.மு.க. கண்டனம்
18 Apr 2025சென்னை : குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு தி.மு.க. தரப்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.