முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      தமிழகம்
OPS-1 2023 04 24

Source: provided

சென்னை : இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

 தென் தமிழக மக்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணையை கட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திற்கு கேரள அரசு கருத்துரு அனுப்பியிருப்பதாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள அரசின்  இந்த நடவடிக்கை, தமிழகத்திற்கு  உரிய நீரை முற்றிலும் தடுக்கும் முயற்சியாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கோள அரசின் இது போன்ற தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கை என்பது முல்லைப் பெரியாறு அணையை ஒட்டியுள்ள தமிழகத்தின் பல மாவட்டங்களை பாலைவனமாக்கும் செயலாகும். ஆகவே வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப, ஆபத்து வரும் முன்பே அதைத் தடுத்த நிறுத்த தேவையான நடவடிக்கைகளை  உடனடியாக எடுக்க வேண்டுமென்று முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து