முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக் கோப்பை தொடர்: அமெரிக்கா சென்றடைந்தது இந்திய வீரர்கள் முதல் குழு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      விளையாட்டு
Indian-players 2024-05-26

Source: provided

வாஷிங்டன் : டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக கேப்டன் ரோகித் சர்மா உள்பட இந்திய வீரர்கள் அடங்கிய முதல் குழு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

வரும் 1-ம் தேதி முதல்...

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தனர். பிளே ஆஃப் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இறுதிப்போட்டியில் விளையாடும் வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக... 

முதல் கட்டமாக கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் உள்பட வீரர்கள் சிலரும் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர். ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, குல்தீப் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோரும் அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளனர். 

விரைவில் அணியுடன்... 

விராட் கோலி, சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அணியுடன் இணையத் தயாராகி வருகின்றனர். அவர்கள் விரைவில் அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வருகிற ஜூன் 5 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து