முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: விசாரணை ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      இந்தியா
Kejrival

Source: provided

புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர், சுப்ரீம் கோர்ட்டால்வழங்கப்பட்ட இடைக்கால் ஜாமீன் நிறைவடைந்தைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி கெஜ்ரிவால் மீண்டும் ஜூன் 2-ம் தேதி திகார் சிறைக்குச் சென்றார்.

இந்த நிலையில், கெஜ்ரிவாலின் உடல்நிலை மற்றும் சிகிச்சையைத் தீர்மானிக்க அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் நடவடிக்கைகளைக் காணொலி மூலம் தனது மனைவியை அனுமதிக்குமாறு கெஜ்ரிவால் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நீதிபதி இன்று (சனிக்கிழமைக்கு) ஒத்திவைத்தார். இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, இந்த வழக்கில் மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் கோரிய கெஜ்ரிவாலின் மனுவைத் டெல்லி நீதிமன்றம் ஜூன் 5-ம் தேதி தள்ளுபடி செய்தது. இருப்பினும், நீதிமன்ற காவலில் இருக்கும் கெஜ்ரிவாலின் மருத்துவ தேவைகளை கவனிக்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து