முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சி செய்யும்: தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் விளக்கம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      தமிழகம்      அரசியல்
Jayakumar 2023 04 15

சென்னை, விக்கிரவாண்டியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 

அதேவேளை, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதனிடையே, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தலைமையில் நேற்று அக்கட்சி கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தி.மு.க. ஆட்சியில் இருக்கும்வரை இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது. பணம், படை பலத்தை கொண்டு பரிசுகளை அள்ளிக்கொடுத்து போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சிக்கும். ஜனநாயக ரீதியில் இடைத்தேர்தல் நடந்தால், அ.தி.மு.க.வே வெற்றி பெறும், அது நடக்காது என்பதால் தான் புறக்கணிக்கிறோம்.என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து