முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் அடக்கம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      தமிழகம்
Kuwait 2024-05-12

சென்னை, குவைத் தீவிபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. 

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 12 ஆம் தேதி பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.  குவைத் வரும் இந்தியர்கள் பலர் இந்த குடியிருப்பில் தங்குவார்களாம்.  அந்த வகையில் இங்கு தங்கியிருந்த 7 தமிழர்கள் உள்பட 50 பேர் பலியாகிவிட்டனர். கேரளாவை சேர்ந்த 24 பேரும் இறந்து விட்டனர்.  அது போல் டெல்லி உள்ளிட்ட நிலங்களை சேர்ந்த 15 பேரும் இறந்து விட்டனர்.  இந்த நிலையில் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டன.

விமான நிலையத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்,  மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி,  தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் 31 பேரின் உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.  இதையடுத்து தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடல்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதையடுத்து கொச்சியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கும் தமிழகத்தின் பிற விமான நிலையத்திற்கும் உடல்கள் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி,  கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னதுரை, சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கர்,  திண்டிவனத்தை சேர்ந்த முகமது ஷெரிப், ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பண்ணன் ராமு,  திருச்சியை சேர்ந்த ராஜூ எபநேசன், பேராவூரணியை சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். இவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உறவினர்கள் கதறிய காட்சி காண்போர் மனதை கலங்க செய்தது.  இறந்தவர்களில் மாரியப்பன்,  சிவசங்கர் ஆகியோரின் உடல்கள் இரவே தகனம் செய்யப்பட்டன.  மற்றவர்களின் உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து