Idhayam Matrimony

அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      உலகம்
America 2024-06-16

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஹெலன் ஆண்டனுச்சி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹெலன் ஆண்டனுச்சி. இவருக்கு வயது 81. இவர் மிக வயதான ரயில் ஓட்டுனர் என்ற பெயரைப் பெற்று, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

1995-ம் ஆண்டு 53 வயதில், ரயில் ஓட்டுனராக பணியை ஹெலன் துவக்கி உள்ளார்.  இது தொடர்பாக, மூதாட்டி ஹெலன் கூறுகையில், 

நான் தினமும் விரும்புவதைச் செய்கிறேன். ஒவ்வொரு நாளையும் ஒரு அற்புதமான பயணமாக மாற்றுவதற்கு உறுதுணையாக இருந்த எனது சக பணியாளர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பயணிகள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். 

எனது பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்வதும், தினமும் அவர்களை சந்திப்பதும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

82வயது பிறந்த நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் மூதாட்டி, தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து அவர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து