முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்க ரெயில் விபத்து: ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      இந்தியா
Ashvini

Source: provided

புதுடெல்லி : மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நேற்று கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபத்துக்கு ரயில்வே துறையின் கவனக்குறைவே முக்கிய காரணமென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் பதவி விலக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கே தெரிவித்துள்ளதாவது, “மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க ரயில்வே அமைச்சருக்கு நேரமில்லை. கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு ரயில்வே துறையை மோசமாக நிர்வகித்து வருகிறது. இந்திய ரயில்வேயை கண்டுகொள்ளாமல் விட்டதற்கு மோடி அரசை பொறுப்பேற்கச் செய்வோம்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.

”மோசமான நிர்வாகம், தவறான கொள்கைகள், தவறான நடவடிக்கைகள் - இவையே ரயில் விபத்துகளின் பின்புலத்தில் உள்ளன. ரயில் பாதைகளில் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் அதே வேளையில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை.

ஒடிஸாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த ரயில் விபத்திலிருந்து இன்னும் நாடு மீளவில்லை. இப்போது பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தால் நிர்வகிக்க முடியவில்லை. ஆகவே ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2021 முதல், ரயில் விபத்துகளால் 329 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியான தகவலுக்கு பதிலளித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது, ”2021 ஜூலையிலிருந்து ரயில்வே அமைச்சராக செயல்பட்டு வரும் அஸ்விணி வைஷ்ணவின் பதவிக்காலத்தில் விளம்பரப்படுத்துதலுக்கும், சமூக ஊடக செயல்பாட்டுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பொறுப்பேற்பதை தட்டிக்கழித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வேயின் இந்த போக்கு கவலையளிப்பதாகவும், மக்களின் பாதுகாப்பு குறித்து நாம் எப்போது ஆலோசிக்கப் போகிறோம்? எனக் கேள்வியெழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரீநேத், “ரீல்ஸ் படங்களை போடுவதை விடுத்து, கவனம் செலுத்த அமைச்சருக்கு நேரமில்லை” என்று அஸ்விணி வைஷ்ணவை விமர்சித்துள்ளார். நாட்டில் நிகழும் தொடர் ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு? என கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து