முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் மாதத்தில் 20 சதவீதம் குறைவாக பெய்த பருவமழை : இந்திய வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 19 ஜூன் 2024      இந்தியா
India-Meteorological 2022

Source: provided

புதுடெல்லி : நடப்பாண்டில் பருவமழையின் ஜூன் மாத மழைப்பொழிவு சராசரியை விட 20 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஜூன் 1 முதல் 18 வரை பருவமழையானது இந்தியாவில் 64.5 மிமீ பெய்துள்ளது. இது நீண்டகால சராசரியான 80.6 மிமீ விட 20 சதவீதம் குறைவு என்றும், ஜூன் 12 - 18ம் தேதிக்கு இடையில் மழைப்பொழிவு குறைந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1 முதல், வடமேற்கு இந்தியாவில் 10.2 மிமீ (இயல்பை விட 70 சதவீதம்  குறைவு) மழைப்பொழிவும், மத்திய இந்தியாவில் 50.5 மிமீ (இயல்பை விட 31 சதவீதம்  குறைவு) மழைப்பொழிவும், தென் தீபகற்பத்தில் 106.6 மிமீ (இயல்பை விட 16 சதவீதம்  அதிகம்) மழைப்பொழிவும் மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 146.7 மிமீ (இயல்பை விட 15 சதவீதம்  குறைவு) மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ரீமெல் புயல் வீசியது. தொடர்ந்து வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் முன்னதாகவே கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன் 12க்குள், கர்நாடகா, கோவா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மகாராஷ்டிராமாநிலத்தின் சில பகுதிகள், ஆகிய மாநிலங்கள் முழுவதும் பருவமழை தீவிரமடைந்தது. ஆனால், ஜூன் 12க்கு பிறகு பருவமழை முன்னேறவில்லை என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

ஜூன் மாதத்தில் மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும், மொத்தமாக நான்கு மாத பருவமழைக் காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இயல்பை விட அதிகமாக மழை பொழிவு இருக்கும் என்றும் இந்த நான்கு மாதங்களில் சராசரி மழைப்பொழிவான 87 செமீ என்பதை தாண்டி 106 சதவீதம்  மழைப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து