முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர் 8 சுற்றில் 4 ஸ்பின்னர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்: பயிற்சியாளர் டிராவிட் கணிப்பு

வியாழக்கிழமை, 20 ஜூன் 2024      விளையாட்டு
Dravid-2024-06-20

பார்படாஸ், டி-20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் மேற்கிந்திய தீவுகளில் தொடங்கிய நிலையில் இந்திய அணி பிளேயிங் 

லெவனில் மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்து பயிற்சியாளர் டிராவிட் பதிலளித்துள்ளார்.

அமெரிக்காவில்... 

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் பார்படாஸில் நடைபெற்றது.முன்னதாக இந்திய அணி விளையாடிய லீக் ஆட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெற்றது. தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறுகின்றன. அங்குள்ள மைதானங்கள் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சமமாக இருந்து வருகிறது. குறிப்பாக பந்து வீச்சில் வேகத்தை விட ஸ்பின்னர்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அணியில் ஸ்பின்னர்...

எனவே சூப்பர் 8 சுற்றில் இந்தியா தங்களுடைய பிளேயிங் லெவனில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னரை கொண்டு வர வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் குல்தீப் அல்லது சஹால் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

சூழ்நிலைக்கு ஏற்ப... 

இது பற்றிய செய்தியாளர் கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு:- "ஒவ்வொரு சூழ்நிலையும் வித்தியாசமானது. நாங்கள் எங்களுடைய சிந்தனையை வளைவுத் தன்மையுடன் வைத்து சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உட்படுத்திக் கொள்ள வேண்டும். நிறைய நேரங்களில் இது போன்ற மாற்றங்கள் எங்களுடைய மனதில் இருக்கும். சில நேரங்களில் அது வேலை செய்யும். சில நேரங்களில் செய்யாது. ஆனால் அனைத்தையும் முந்தைய முடிவை வைத்து எங்களால் தீர்மானிக்க முடியாது. எடுத்துக்காட்டாக பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் அக்சர் படேலை மேல் வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பினோம். ரிஷப் பண்டையும் மேலே இறக்கியுள்ளோம்.

பல மாற்றங்கள்...

டி20 பார்மெட்டில் நீங்கள் மைதானத்தின் அளவு மற்றும் எதிரணியின் சேர்க்கையை வைத்து பல மாற்றங்கள் நிகழ்த்தப்படுவதை பார்க்கின்றீர்கள். இதுவரை எங்கள் அணியில் வாய்ப்பு பெறாத எஞ்சிய 4 வீரர்களும் தரமானவர்கள். போட்டியின் சூழ்நிலை மற்றும் மைதானத்தை வைத்துதான் எங்களுடைய அணியின் சேர்க்கையை தீர்மானிக்கிறோம். அந்த வரிசையில் இங்கே குல்தீப் அல்லது சஹால் போன்ற ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனாலேயே நாங்கள் 4 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்துள்ளோம்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து