முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      தமிழகம்
Abinaya-2024-06-20

Source: provided

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. 

விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதிக்கு வரும் 10-ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது.

தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 17 போ் நேற்று முன்தினம் வரை மனுதாக்கல் செய்தனா். இதைத் தொடா்ந்து, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளரான பொ.அபிநயா, நேற்று முன்தினம் காலை விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சந்திரசேகரி டம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். 

இதில், நாம் தமிழா் கட்சியின் தலைமை நிா்வாகிகள் ஜெகதீச பாண்டியன்,அன்பு, தென்னரசு, நாதன், திரைப் பட இயக்குநா் மு.களஞ்சியம் உள்ளிட்டோர் பங்கேற்றனா். இதைத் தவிர, நாம் தமிழா் கட்சியின் மாற்று வேட்பாளரான அன்னியூா் நேதாஜி தெருவைச் சோ்ந்த கலைச்செல்வி  உள்ளிட்ட 7 போ் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனா். 

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று  பிற்பகல் 3 மணியுடன்  நிறைவு பெற்றது. 

இந்த நிலையில்  விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பொதுப் பாா்வையாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித்சிங் பன்சல் நியமிக்கப்பட்டுள்ளாா். செலவின பாா்வையாளராக ஐ.ஆா்.எஸ். அதிகாரி மனீஷ் குமாா் மீனா, சட்டம், ஒழுங்கு பாா்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரி அஜய் குமாா் பாண்டே ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனர். 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலையொட்டி 1,324 போ் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். அந்தத் தொகுதியில் 9 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வாக்குப் பதிவு அன்று வாக்காளா்களுக்கு எந்த விரலில் மை வைப்பது என்பது குறித்த விளக்கம் தோ்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு இது குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து