முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 20 கோடி மதிப்பீட்டில் போரூர், பெருங்குடி ஏரிகள் மேம்படுத்தப்படும் : அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      தமிழகம்
Sekarbabu-2023 04 06

Source: provided

சென்னை : போரூர் ஏரி ரூ. 10 கோடியிலும், பெருங்குடி ஏரி ரூ. 10 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

சட்டசபையில் நேற்று சி.எம். டி.ஏ. மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது,

சென்னைப் பெருநகர் பகுதியில் 10 பொது நூலகங்கள், அதிவேக இணையம், போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஆகியவை ரூ. 20 கோடி செலவில் மேம்படுத்தப்படும். 

மேலும் ரூ. 30 கோடி செலவில் மூன்று பன்நோக்கு மையம் அமைக்கப்படும். 'சென்னை அங்காடிரூ. 40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை நகரில் வெள்ள அபாயத்தை குறைக்க வெள்ளக்கட்டுப்பாடு வரைபடம் தயாரிக்கப்படும்.

மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். அண்ணாசாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் உள்ளூர் பகுதி திட்டம் செயல்படுத்தப்படும்.

கோயம்பேடு மார்க்கெட் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.  சென்னை பெருநகரத்தில் அமைந்துள்ள 10 சுரங்கப்பாதைகள் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 

திருவான்மியூர் பஸ் நிலையம் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். போரூர் ஏரி ரூ. 10 கோடியிலும், பெருங்குடி ஏரி ரூ. 10 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து