முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரம் கோவிலுக்கு மெக்கானிக்கல் யானை பரிசாக வழங்கியது பீட்டா அமைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      இந்தியா
Beta-India 2024-06-23

Source: provided

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகா கோவிலுக்கு பெரிய அளவிலான மெக்கானிக்கல் யானை ஒன்றை பீட்டா  அமைப்பு பரிசாக அளித்துள்ளது.

இந்த மெக்கானிக்கல் யானைக்கு பாலதாசன் என்று பீட்டா இந்தியா அமைப்பு பெயர் வைத்துள்ளது. கோவில் திருவிழாக்களில் யானைக்கு பதில் இந்த மெக்கானிக்கல் யானையை பயன்படுத்தலாம் என்பதற்காக தான் இந்த பீட்டா இந்தியா அமைப்பு இதை பரிசாக அளித்துள்ளது.

உயிருள்ள யானைகளை சொந்தமாகவோ வாடகைக்கோ எடுத்து கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த முயற்சியில் பீட்டா இந்திய அமைப்பு  இறங்கியுள்ளது.இது கேரளாவில் அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது மெக்கானிக்கல் யானையாகும். 

இந்த யானை 3 மீட்டர் உயரமும் 800 கிலோ எடையும் கொண்டது. திருச்சூரில் உள்ள இரிஞ்சாடப்பிள்ளை  கிருஷ்ணர் கோவில் மற்றும் கொச்சியில் உள்ள திருக்கயில் மகாதேவா கோயிலிலும் ஏற்கனவே மெக்கானிக்கல் யானைகளை பீட்டா இந்தியா அமைப்பு பரிசாக வழங்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து