முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை நடைபெற்றால்தான் நேர்மையான முடிவு கிடைக்கும் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
ADMK 2024-06-24

Source: provided

மதுரை : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐவிசாரணை நடைபெற்றால் தான் நேர்மையாக முடிவு கிடைக்கும் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தில் 58 க்கு மேற்பட்டோர் பலியாகி, 100க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அ.தி.மு.க.சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதன்படி மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை பேச்சியம்மன் படித்துறை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர் ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது-

சட்டசபையில் நியாயம் கிடைக்கவில்லை ஏனென்றால் அங்கு பேச முடியவில்லை.அதனால் தான் இன்றைக்கு வீதியில் மக்கள் சேர்ந்து போராடுகிறோம். ஏழை,எளிய மக்கள் உயிரை பறிக்கும் வகையில் இந்த அரசு உள்ளது. கள்ளச்சாராயத்தால் 58 பேர் தற்போது வரை பலியாகி உள்ளனர்.நாங்கள் மேடை விட்டு இறங்கும் போது எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்று அச்சம் எங்களுக்கு உள்ளது. நடைபெற்ற சம்பவத்திற்கு சிபிஐ  விசாரணை வேண்டுமென்று எடப்பாடியார் கூறுகிறார்.ஆனால் அமைச்சர் ரகுபதி சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று கூறுகிறார். சிபிஐவிசாரணை நடைபெற்றால் தான் நேர்மையாக முடிவு கிடைக்கும். சட்டசபையில் 45 நாள் நடத்த வேண்டும்.ஆனால் அவர்கள் 8 நாளாக சுருக்கி விட்டார்கள். நடைபெற்ற சம்பவத்திற்கு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப கூட அனுமதிதராமல் கல்மனம் கொண்ட அரசாக உள்ளது.

மக்கள் உயிர் பிரச்சினை காட்டிலும் வேறு எந்த பிரச்சனையை சட்டசபையில் கேள்வி எழுப்ப முடியும் பதில் சொல்ல தயாராகாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். பதில் சொன்னால் நாங்கள் அவரை ஏற்றுக் கொள்கிறோம்.ஸ்டாலினை போல நாங்கள் ஏசி அறையில் இருந்து கொண்டு கோரிக்கையை கொடுக்கவில்லை நேரடியாக சென்று மக்களை பார்த்து அவர்கள் விட்ட கண்ணீரை தான் நாங்கள் கூறுகிறோம். முதல் நாள் சட்டமன்றம் நடைபெற்றபோது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார்கள் அந்த மரபை நாங்கள் மீறவில்லை. ஆனால் மறுநாள் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.58 பேர்கள் செத்த பிறகு இடமாற்றத்தை செய்கிறார மாவீரன் ஸ்டாலின், இவர் நடவடிக்கை எடுக்க 58 உயிர்கள் தேவைப்படுகிறது. களத்தில் சென்று இன்னும் மக்களை சந்திக்கவில்லை ஆறுதல் கூறவில்லை ஏனென்றால் அவரது மனம் குற்ற உணர்ச்சியாக உள்ளது.

இப்படிப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடைபெறவில்லை, ஏற்கனவே மரக்காணம் சம்பவத்தில் 23 பேர் பலியானார்கள் அதற்கு சிபிசிஐடி போன்ற விசாரணை நடைபெறுகிறது.இன்னமும் அது நிலுவையில் தான் உள்ளது. அம்மா, எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் காவல்துறை சுதந்திரமாக இருந்தது.ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்தது, தற்போது காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறிவிட்டது.நீங்கள் சட்டமன்றத்தில் பேச வாய்ப்பை மறுத்தீர்கள் ஆனால் இன்றைக்கு 8 கோடி மக்களும் ஸ்டாலின் வீட்டுக்கு போக வேண்டும் எடப்பாடியார் கோட்டைக்கு வரவேண்டும் என்று உரிமை குரலை எழுப்பி வருகிறார்கள்.

எடப்பாடியாருக்கு நீங்கள் எத்தனை தடை போட்டாலும் அந்த தடைகளை தகர்த்து எறிந்து களத்தில் போராட கழகத் தொண்டர்கள் காத்து உள்ளார்கள். எடப்பாடியார் மருந்து இல்லை என்று கூறியதற்கு அமைச்சர் கணக்கு காண்பித்தார் நாங்கள் மக்கள் உயிரைக் காக்க கணக்கு தான் வேண்டும் என்று கேட்கிறோம்.விஷ முறிவு மருந்து உள்ளதா என்று கேட்டதற்கு இதுவரையும் பதில் இல்லை தமிழகத்தில் இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது ஏற்கனவே மரக்காணம் சம்பவம், நல்ல மாடுக்கு ஒரு சூடு என்பது போல இனியும் நீங்கள் ஆட்சியை தொடரக்கூடாது ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து