முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இறுதிப்போட்டியில் இன்று ஜோகோவிச்- ல்கராஸ் மோதல்

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      விளையாட்டு
Jokovic 2024-07-13

Source: provided

லண்டன் : இன்று நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்- ல்கராஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

அரையிறுதிக்கு...

இந்தாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 10ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். லண்டன் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் நோவக் ஜோகோவிச் உடன் மோதவிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் காயம் காரணமாக விலகினார். இதனால் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.

மீண்டும் அல்கராசுடன்...

அரையிறுதியில் இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டியுடன் ஜோகோவிச் மோதினார். முதல் செட்டில் 6-4 வென்ற ஜோகோவிச் இரண்டாவது செட்டில் 7 -6 (7-2) செட்டில் போராடி வென்றார். மூன்றாவது செட்டினை 6-4 என எளிதாக வென்றார். இதன்மூலம் இறுதிப் போட்டியில் மீண்டும் அல்கராஸ் உடன் மோதுகிறார் ஜோகோவிச்.

கடந்தாண்டு விம்பிள்டனில் அல்கராஸ் சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஜோகோவிச் பழிதீர்ப்பாரா என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இன்று இறுதிப்போட்டி லண்டனில் நடைபெறுகிறது. 37 வயதில் 37வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து