முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹமாஸ் தளபதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: 90 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      உலகம்
Gaza 2024-07-14

Source: provided

காசா : ஹமாஸ் ஆயுதக்குழு தளபதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பேர் பலியாகினர். 

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. 

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.   ஆனால், 116 பேர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 

ஹமாஸ் அமைப்பில் அரசியல் பிரிவு, குவாசம் பிரிகேட் என்ற ஆயுதக்குழு பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஹமாஸ் அமைப்பின் தலைவராக யாஹா சின்வர் உள்ள நிலையில் அந்த அமைப்பின் ஆயுதக்குழு தளபதியாக முகமது டைப் செயல்பட்டு வருகிறார். 

பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள முகமது டைப் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்களில் முதன்மை நபர் ஆவார். இதையடுத்து, முகமது டைப்பை அழிக்கும் நடவடிக்கையில்  இஸ்ரேல் இறங்கியது. 

அவர் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நிலையில் முகமது டைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  அல் மவாசி பகுதியில் முகமது டைப் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதலில் 90 பேர் உயிரிழந்த நிலையில் இதில் குவாசம் பிரிகேட் என்ற ஹமாஸ் ஆயுதக் குழுவின் தளபதியும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் 2-ம் நிலை தளபதியான ரபா சலமாவும் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளை, இந்த தாக்குதலில் பலியான ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியாகவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து