முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறார் ரோகித்சர்மா

புதன்கிழமை, 17 ஜூலை 2024      விளையாட்டு
Indian-team 2024-02-06

Source: provided

மும்பை : இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்குவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓய்வு அளிக்க... 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பீர் வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்னதாக குறைந்தளவிலான 50 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதனால், இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் மூத்த வீரர்களை விளையாட வைப்பதில் காம்பீர் ஆர்வமாக உள்ளார்.

பங்கேற்கிறார்...

தற்போது விடுமுறையில் இருந்து வரும் ரோகித் சர்மா, தனது விடுமுறையை குறைத்துக்கொண்டு அடுத்த மாதம்நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்கிறார். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார் என தெரிகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று ஆன்லைனில் நடைபெற்றது. அதற்கு முன் தனது வருகையை பிசிசிஐ.க்கு அறிவிப்பார் என தெரிகிறது.

சுற்றுப்பயணம்... 

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி பல்லகெலேயில் வருகிற ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டி கொழும்புவில் ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. கே.எல். ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் திரும்ப உள்ளனர்.

ஓய்வு பெறுவதாக... 

ஒருவேளை ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படவில்லை என்றால், கே.எல். ராகுல்தான் அணியை வழிநடத்துவார். ஏனெனில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்திக் பாண்டியா ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து