முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : மேம்படுத்த ரூ. 21 கோடி ஒதுக்க உத்தரவு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024      தமிழகம்
CM-1 2024 07 19

Source: provided

சென்னை :  சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

எளிய மக்களுக்கு மலிவான உணவு வழங்கிடும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது அம்மா உணவகம். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த உணவகங்கள் மூலம் குறைவான விலையில் உணவு வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். அப்போது உணவகத்தில் சாப்பிடுபவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அம்மா உணவகத்தின் சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், உணவகங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள், கருவிகளை மாற்றவும், சுவையான, தரமான உணவை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தினார். அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ. 21 கோடி ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். 

இதில், புதிய பாத்திரங்கள், கருவிகள் வாங்க ரூ. 7 கோடி; புனரமைப்பு பணிகளுக்காக ரூ. 14 கோடி ஒதுக்கப்படுகிறது. அம்மா உணவகங்களில் அவ்வப்போது ஆய்வு செய்ய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் சென்ற ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட 388 அம்மா உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்கு பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது. 

இந்த உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில் சுமார் நான்கு கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா உணவங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவும், மளிகை பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உருளைகள் போன்றவை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தயிர் ஆவின் நிறுவனத்திடம் பெறப்படுகிறது. 

இந்த உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த மூன்றாண்டுகளில் 148.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

மேற்கூறிய பல்வேறு செலவினங்களுக்கும் 2021 மே மாதம் முதல் இதுவரை சென்னை மாநகராட்சியால் சுமார் 400 கோடி ரூபாயும், அரிசி மற்றும் கோதுமைக்கான தமிழ்நாடு அரசின் மானியமாக 69 கோடி ரூபாயும் என மொத்தமாக 469 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இந்த உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இந்த அரசு வழிவகுத்துள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து