Idhayam Matrimony

கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பு?

புதன்கிழமை, 31 ஜூலை 2024      தமிழகம்
RN-Ravi 2023 04 03

Source: provided

சென்னை : கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்கலாம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக கவர்னராக இருந்து வரும் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நேற்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெற்றது. எனவே, தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படுவாரா? அல்லது அவருக்கே பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவியது.

இதற்கிடையில் அண்மையில் டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என். ரவி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட சில அமைச்சர்களை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள கவர்னர்கள் மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க இருப்பதாகவும் இதனால், அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்கலாம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திற்கு புதிய கவர்னர் தொடர்பான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பதால் அவரே கவர்னராக தொடர்வார் எனக் கூறப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து