முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி பொன்மலையில் மாநாடு: அனுமதிக்கோரி த.வெ.க. கடிதம்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Bussy-Anand 2023-11-03

Source: provided

திருச்சி : நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை திருச்சி பொன்மலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே திடலில் முதல் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்காக ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்கடிதத்தில் தேதி ஏதும் குறிப்பிடப்படாததால், தேதி குறிப்பிட்டு மீண்டும் கடிதம் வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும், அந்த திடல் 8 ஏக்கர் பரப்பளவு மட்டுமே இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம் என்பதால் மாநாடு நடத்த வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது.

இந்த முதல் மாநில மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், செப்டம்பர் மாத இறுதியில் நடத்த மாநாட்டை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று, பல்வேறு மாவட்டங்களில் மாநாடு நடத்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இடம் பார்வையிட்டு வருவதால், அதிகாரப்பூர்வ தகவல் கட்சி தலைமையில் இருந்து வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து