முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு : சிறப்பாக பணி செய்த காவலர்களுக்கு பதக்கம்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      தமிழகம்
CM-3 2024 08 11

Source: provided

சென்னை : முதல்வர் மு.கஸ்டாலின் தலைமையில் கல்லூரி மாணவ - மாணவியர் நேற்று (ஆக.12) போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில், போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலை தடுத்து சிறப்பாக பணி செய்த போலீசாருக்கு, ‘முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று காலை காவல்துறை சார்பில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவியர் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை முதல்வர் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து முதல்வர், மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் நீரஜ்குமார், டிஜிபி-யான சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி-யான அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து