முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழிக்குள் விழுந்த இந்திய பெண்ணை தேடும் பணி நிறுத்தம்: மலேசிய அரசு

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2024      உலகம்
Malaysia 2024-09-01

Source: provided

கோலாலம்பூர் : மலேசியாவில் குழிக்குள் விழுந்த இந்திய பெண்ணை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணி கடினமானது என்பதால் தேடுதல் பணி முடிவடைவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த அணிமிகனிப்பள்ளியை சேர்ந்த விஜயலட்சுமி, தனது கணவர் மற்றும் மகனுடன் மலேசியாவில் வசித்து வந்தார். ஜாலான் மசூதியில் உள்ள மலாயன் மேன்ஷனுக்கு குடும்பத்துடன் நடந்து சென்ற போது, அவ்வழியில் அமைக்கப்பட்டிருந்த சிலாப்பின் குழியில் விஜயலட்சுமி தவறி விழுந்தார்.

கேமராக்கள் மற்றும் ரேடார்கள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. எனினும், தொடர்ந்து 8 நாட்களாக விஜயலட்சுமியை மீட்புக் குழுவினர் தேடி வந்த நிலையில், கால்வாய் குழிக்குள் விழுந்த விஜயலட்சுமி மீட்க முடியவில்லை என்று மலேசிய அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா தெரிவித்தார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், விஜயலட்சுமியை மீட்பதில் சிக்கல் உள்ளது. மீட்பவர்களின் உயிருக்கு கூட ஆபத்து இருப்பதாக கருதுகிறோம். கழிவுநீர் வாய்க்காலில் இருந்த தண்ணீரை வெளியேற்றி தேடினோம். 

ஆனால் விஜயலட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே எங்களது தேடும் பணியை முடித்துக் கொண்டோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து