முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2024      தமிழகம்
TN-Safety

வேதாரண்யம், நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடத்தலை தடுக்கவும் 'சாகர் கவாச் ஆபரேஷன்' என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடலோர பகுதிகளில் 'சாகர் கவாச்' ஒத்திகை 2 நாட்கள் (நேற்றும், இன்றும்) நடக்கிறது.

அந்த வகையில், நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் கடலுக்கு சென்று நேற்று ஒத்திகையில் ஈடுபட்டனர். பின்னர், கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். அங்கு வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்தனர. நேற்று காலை தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகையானது இன்று மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து